பழைய கவலை மறந்திட்டு மனதில் புதிய கவிதை மலர்ந்திட, சுக துக்கம் இரண்டிலும் சுகமே என்றும் நிலைத்திட, குளிர் நிலவாய் மொழி பேசி வாழ்வு சூரியனாய் நிலைத்திடவே, சூத்திரங்கள் சொல்ல வரும் வருடத்தை வரவேற்போம்.. "வாழ்க வையகம்"
சிக்கலான சில பொழுது சிறகு வலித்து துவளுகையில் சிக்கெடுத்தச் சிறு விரல்கள் சீரிய அவள் மொழிகள், என்னோடு சிரித்த பலரோடு எனக்காக அழுத அவள் விழிகள், அனைத்தும் கருவாகி அகம் தன்னில் நெருப்பாகி அடுத்த பிறப்பிலும் அன்பாய் உருவாகும்...
குன்றத்தில் ஒளிர்கின்ற கோஹினூர் வைரமவள், ஓலமிடும் மன ஒலியில் ஒன்று கூட கேட்டிடாது, ஓசையின்றி ஒதுங்கி விட்டாள் என் உயிரை மட்டும் உருவிக்கொண்டு
வாழ்க்கையில் ஏமாந்தவள் அல்ல நான் ஏமாற்றமே வாழ்க்கையாய் கொண்டவள்.... நிலவை நான் விரும்பினால் நிலவொளி கூட என்னை விட்டு விலகி விடும்.... பதினேழு வயதில் படிப்பை இழந்தேன்..... பதினெட்டு வயதில் பிறந்தகம் இழந்தேன்.... இருபதில் இளமை இழந்தேன்.. வருடம் செல்லச் செல்ல வாழ்வில் எல்லாம் இழந்தேன்.. இறைவனும் என்னை விரும்பாததால் இரு முறை முயன்றும் சாவை இழந்தேன்... பிறகு ஏனிந்த வாழ்க்கை என்ற உன் ஏளன பார்வை புரிகிறது... சொல்கிறேன்...நான் வாழத்தான் வேண்டும் என் வண்ணத்துப்பூச்சிகள் வானில் சிறகடிக்க நான் வாழ்த்தான் வேண்டும்... இழந்த சிரிப்பொலி எல்லாம் என்னைச் சுற்றி என்றும் கேட்கத்தான் வேண்டும்... அதற்காக எதையும் இழப்பேன் என்னையும் இழப்பேன்....
மகேஷ்வரன் மறுத்தும் மண்ணுக்குள் மறைந்த மாணிக்கப் பெண்ணின் மலர் முகம் காணாது, பித்து பிடித்து பேதலித்த பேதையினை, போதையேற்றி தெளிய வைக்க போராடும் போதினிலே, மூடுபனியாய் எனை மாற்றி மூச்சு விட வைத்த மூலிகை மாணவன் _ உன்னை மூப்பினிலும் மறவேனே!
பெண்மையின் இலக்கணத்தை 'புணர்ச்சி' (மன)விதிப்படி புணர்ந்து இலக்கணப் பிழையாக்கிட்ட என் தலைவனுக்கு இதயம் எழுதிய இரு வரி 'குறுந்தொகை'யை 'குழு உக்குறி'யில் குறிப்புணர்த்த 'மங்கலச்சொல்' மனதினில் மலரவில்லை தமிழ் மொழி கற்ற தமிழனுக்கு 'விழி மொழி' கற்க கண நேரம் கிடைக்கலியோ?
['புணர்ச்சி' 'குழு உக்குறி' 'மங்கலச்சொல்' ] இதெல்லாம் தமிழ் இலக்கணத்தில் வரும் சொற்கள்
[ஒரு இளவரசியை சேர நாட்டு படை தளபதி விரும்புகிறார். ஆனால் அவள் தந்தையோ வெரொரு வணிகரை மணம் செய்து வைக்க விரும்புகிறார், எது தெரிந்து மூவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுப்பதாக நினைத்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.. இதை பார்த்த இயற்கை தேவன் அடுத்த பிறவியிலாவது மூவரும் இணைந்து சந்தோசமாக வாழ ஆசிர்வதிக்கிறார்..
மறுபிறவியில் அவள் வணிகரை முதலில் மணம் முடித்து விட்டாள். நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதியை சந்திக்கிறாள்...அப்போது அவள் என்ன முடிவு எடுத்தால் மூவரும் சந்தோஷமாக வாழலாம்????]
முடிந்து போன சொந்தமொன்று முல்லை மலராய் மூச்சு விட வானம்பாடியாய் வந்தது வணிகரின் காதல்...
வசந்த கால நதியினிலே சுழல் ஒன்று வந்தது போல் தலையெடுத்த காலம் வரை வாராத தளபதி தலை நரைத்து போகும் முன் வந்து விட்ட கோலமென்ன?
இயற்கை தந்த சாபமோ இளவரசி செய்த பாவமோ இன்றும் காதல் இதயத்தை கிழிக்கிறதே....
காலம் கடந்த காதலை கருத்தினில் ஏற்க முடியாது காமம் கடந்த காதலாய் கண்ணுக்குள் சிறை வைத்தாள் 'நட்பாக'
என்றும் இணையில்லா இன்னர்வீல் தொடங்கின இருண்ட என் இதயத்தில் மின்னல் பூ பூத்தன.. பெண்ணாய் பிறந்தேன்
புவியோடு வளர்ந்தேன்
கண்ணனுக்கு வாக்கப்பட்டு
கற்பனையாய் வாழ்ந்தேன்..
காட்டாற்று வெள்ளமென
கலமது சுழன்றோட
கண்ணிமைக்கும் நேரத்தில்
இன்னர்வீல் வந்தது
இனிய குடும்பம் தந்தது..
விட்டு போன உறவெல்லாம்
தரணியிலே சிதறியிருக்க
தானும் சென்று உதவிடும்
தாய்மை உணர்வை தந்தது..
நட்பு என்னும் தாய் வயிற்றில்
நாழும் பிறந்து சேயானோம்
தாய் இல்லா சேய்களும்
தழைத்தோங்க உதவிடுவோம்..
சாதி மதம் பல கடந்து
வயது வசதி தனை மறந்து
தனிமை சிறையின் விலங்குடைத்து
வானமளவு உயர்ந்திடுவோம்
நமக்குள் வல்லமை பல தந்திடுவோம்..
தாயாய் தங்கையாய் தரம் பிரித்து
தன் மன உணர்வை பகிர்ந்திடுவோம்,
தோழியாய் குழந்தையாய் குணம் மாறி
கூடி குலாவி மகிழ்ந்திடுவோம்..
கூட்டு குடும்பம் மறையும் காலமிதில்
சுற்றம் என்ன சொன்னாலும்
எந்த சூழலில் மாட்டிக் கொண்டாலும்
இன்னர்வீல் குடும்பம் கலையாது
நாம் கூடி களித்து வாழும் வரை..
நண்பர்களே! பள்ளி நாட்களில் நன்றாக நடனமாட கூடிய நான்இப்போது தொடர்ந்து 1/2 மணி நேரம் நடக்க கூடசிரம படுகிறேனே என்று வருந்தும் பொழுது..நேற்று தொலைகாட்சியில் ஆன்ந்தபாபுவை பார்க்கநேர்ந்தது..நல்ல கால்கள் கருகிய நிலையில்...அவர் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருகும்??அதை உணரும் போது தோன்றிய கவிதை தான் இது... -----*----------*----------*---------* ஆடிய நிகழ்வினை மனம் அசை போட ஆனந்த நாட்கள் கண்ணில் நிழலாட தலை தானாக் குனிந்தது விழி நீரில் பாதம் நனைந்தது......
காலத்தின் மாற்றமோ கால்களின் இரத்த ஓட்டமோ பாதிக்கப்பட்டது என் மனம் பதறியது மறுகணம்...
ஆனந்த தாண்டவம் ஆடிய ஆனந்த பாபுவை கண்டதும் அரற்றியது அனுதினம்...
ஆண்டவனின் திருவிளையாட்டில் மன்னிக்கவும் " தீ "விளையாட்டில் கருகியது அவர் கால்கள் மட்டுமல்ல அதை கண்ட நம் மனமும் தான்...
பருக பாலில்லை என அழுதேனே பசிக்கு நீரில்லா அவரை காணும் வரை.. வெட்கி மீண்டும் தலை குனிய பாதம் பார்த்தது பாசத்தோடு...
காதலி சம்மதித்தால் காதலியுங்கள்....... பெற்றோர் சம்மதித்தால் கரம் பிடியுங்கள்.......... இரண்டும் இல்லையென்றால் காத்திருங்கள்..... அடுத்த "வாலன்டைன்ஸ்டே" வரும் வரை.....
காதலென்ற புதிய வரவால் கலைந்து போனது குடும்பமென்ற பழைய உறவு...
மெட்டி ஒலியால் என்னை கட்டி இழுத்தாய்.. கொள்ளை அழகால் என்னைகொள்ளையடித்தாய்.. கூர் விழியால் என்னைகுத்திக் கிழித்தாய்... கும்மிருட்டு வேளையிலும் குலுங்கி அழ வைத்தாய்... நீ கொடுக்கும் சித்ரவதையில் சிதறிப் போன என்னை சீக்கிரத்தில் கொன்று விடு பெண்ணே உன் அழுத்தமான முத்தத்தால்...! கா.உமார்த்தி.
Tuesday, June 17, 2008
உருவில்லா உன் மனதை உற்று கேள் உள்ள சிணுங்களிலில் உறைந்திருக்கும் என் குரலும்.... க.உமார்த்தி.
சில பொழுது சிரிக்கின்றேன் பல பொழுது அழுகின்றேன்.... சிந்தை சிதறியே சிலையாய் சமைகிறேன்.... வன்மம் தழைத்தோங்க ஜென்மத்தில் சில நாள் குரூரத்தில் குளிக்கிறேன்..... குமரன் ஆடிய நெஞ்சத்தில் சாத்தனை குடி வைக்கிறேன்.... கூடி களித்து மகிழ்கயிலும் குடைசலில் கூனியாய் சதி செய்கின்றேன்.... மன்னித்து விடு இறைவா! மறு பிறவியாவது மனித பிறவி எடுக்கிறேன்...
அன்பு அலையடிக்க ஆசைக்கு அணை போட்டும் இதயத்தின் இடப் பக்கம் ஈட்டியாய் இறஙகி விட்ட உனக்கு மட்டும் கூறுகின்றேன் ஊணுக்கும் தெரியாது என்னுள்ளம் எரிகிறது ஏனென்று புரியாது ஐம்புலனும் அழுகிறது... ஒருவரும் அறியது ஓசையின்றி வந்து விடு... மயானத்தில் மட்டுமாவது மறுபடியும் சந்திப்போம்....
பூவையரை பூக்களென புலவர்கள் புகழ்ந்ததால் பூவினவள் வாசத்தை நுகரத் துடிக்கும் ஆண்களே பூ ஒன்று புயலாகி பூகம்பம் ஏற்பட்டால் புஜ் நகரம் போல் பொடிப் பொடியாய்ப் போவீர்கள்.
நீல வான ஓடையில் நீந்தி விளையாடிய நிலவொன்று மித்ந்து வந்த மேகத்தில் மோகம் கொண்டு அதனுள் மோகித்து மறைந்தது;
மறைந்த நிலவு கரைந்து கரைந்து விண்மீன்களை உருவாக்க, மோகம் தெளிந்த மேகமோ நிலவை விட்டு விலக முழு நிலவானது மூன்றாம்பிறையாக நிர்சலனமின்றி தோன்றியது;
நிர்மல வானில் மூன்றாம் பிறையை ரசித்துக் கவிபாடும் கவிஞன் வரும் வரை முழுவதும் கரைந்து அம்மாவாசை வந்து விட்டால் பாவம் அந்த நிலாவென்று அழுதழுது கரைந்தது வானம்...
பெண்ணே நீ வரும்போது உன் கண்ணின் மின்னல் கண்டு என் இதயம் பூப்பூத்தது....... உன் சிரிப்பின் ஒலிகேட்டு மௌத் ஆர்கன் மௌனமானது..... உன் தேக வாசத்தில் என் வீட்டின் ரோஜாதலைகுனிந்தது...... என்னைத் தொட்டுச் செல்லும்போது என் உயிரேஅடிமையானது..........._ _____________ உமார்த்தி.