பெண்மையின் இலக்கணத்தை
'புணர்ச்சி' (மன)விதிப்படி
புணர்ந்து
இலக்கணப் பிழையாக்கிட்ட
என் தலைவனுக்கு
இதயம் எழுதிய
இரு வரி 'குறுந்தொகை'யை
'குழு உக்குறி'யில்
குறிப்புணர்த்த
'மங்கலச்சொல்'
மனதினில் மலரவில்லை
தமிழ் மொழி கற்ற தமிழனுக்கு
'விழி மொழி' கற்க
கண நேரம் கிடைக்கலியோ?
['புணர்ச்சி' 'குழு உக்குறி' 'மங்கலச்சொல்' ]
இதெல்லாம் தமிழ் இலக்கணத்தில் வரும் சொற்கள்
No comments:
Post a Comment