மாலை 6:00 மணி அளவில் அரவிந்த அரங்கத்தில் அடியெடுத்து வைக்க கோபியர் நடனத்தில் என் கோலவிழிகள் பூத்தது....
அடுத்து வந்த அவ்வையின்
அமுத மொழியில் , அடங்கி ஒடுங்கிய மனதை,
மனம் என்னும் மேடையில் மலர் ஒன்று, தென்றலாய் தாலாட்ட, தன்னிலை மறந்து
தனிமை உணர்ந்தேன் அரங்கத்தில்...
மணிகளில் மாணிக்கமாய், நறுக்குத்தரித்த,
நல் வார்த்தை நான்கோடு நகர்ந்திட்ட, டாக்டர் பாத்திமா அம்மாவை தொடர்ந்து,
படபடக்கும் பட்டாசாய் சிந்தனை வெடி கொளுத்தி, மனதை சிந்திக்கத் தூண்டிய முனைவர் நசீமா அம்மாவின் .. நல்வார்த்தைகளில்,
அரை வினாடி அப்துல் கலாம் ஐயாவை நான் கண்டேன்..
தன் பண்பட்ட அபிநயத்தால், பரதத்தில், மகாபாரதத்தை அரங்கேற்றிய, பாரதி யின் படைப்பு கண்டு, பாதி உறைத்த நெஞ்சம்,
கண்ணாமூச்சி ஏனடா என்று பொய்யாக கடிந்து கொண்ட ,
கன்னியரின் களி நடனத்தில் காதல் கொண்டு,
கண்கள், என் கண்ணாளனை தேடிச் செல்கையில்,
தொலைதூரத்தில், தேவலோகம் ☁️..
எங்கெங்கும் காணினும் சக்தியடா,
விழிகள் விரிய வியந்து தரிசித்தோம் பூலோகத்தில் அனுசியாவோடு அன்னையரை🙏
அரை நொடி ஆகவில்லை, அதற்குள் ஒரு அபலையின் அழுகுரல், ஓரங்க நாடகத்தில் ஒருத்தி அழுது சண்டையிட அதைக்கண்டு அரங்கமே அதிர்ந்தது ஆண்களின் சிரிப்பொலியில்..
இன்னுமா முடியவில்லை என்ற செம்பு சண்டை,
உஸ்ஸ் ...
அப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று வடிவேலு குரலில் ஒருவர் சாய்வு நாற்காலியில் சரிந்தமர,
சட்டென பறந்து வந்து கட்டழகன் தொட்ட, *கன்னங்கருத்த கிளி கூட்டம் ,*ஒன்று காண்பவர் கண்களை களவாடி சென்றன❤️
திருடு போன இதயத்தை,
திருப்பிக் கொடுத்தது சித்த மருத்துவரின் கணீர் குரலும், சீரிய தமிழ் பாடல்களும் .
ஒரு மாதம் சிறகடித்த நம் இதயத்தை ஒரே நாளில், ஒருங்கிணைத்து, முடிவுக்கு கொண்டு வந்த, ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
அன்புடன் ✒️ உமாராணி கருணாமூர்த்தி🥰
No comments:
Post a Comment