ஜீவனுக்குள் ஜீவிக்கும்
என் ஜீவிதமே !
உன் ஜீவனதை குளிப்பாட்டும்
ஜீவ நதி நானே... !
சிந்தனைச் சிதறடித்த
சிங்களத்தமிழ் பெண்ணே!
என் சிந்தையதில் அமுதாக
கலந்தவளும் நீ தானே....!
அணுவெல்லாம் நுழைந்தாடும்
ஆளுயர ஆக்ஸிஜனே
என் சுவாசமதை சூடேற்றும்
செஞ்சூரியனும் நீ தானே....!
உள்ளத்தில் "கள்"ளாகி
காட்சிதனில் கருவாகி
என்னை களவு கொண்ட
காதலியே !
களிகொள்ளும் என்னுள்ளம்
உன்னை கவிபாடும் போதெல்லாம்...!
No comments:
Post a Comment