சிக்கலான சில பொழுது
சிறகு வலித்து துவளுகையில்
சிக்கெடுத்தச் சிறு விரல்கள்
சீரிய அவள் மொழிகள்,
என்னோடு சிரித்த பலரோடு
எனக்காக அழுத அவள் விழிகள்,
அனைத்தும் கருவாகி
அகம் தன்னில் நெருப்பாகி
அடுத்த பிறப்பிலும்
அன்பாய் உருவாகும்...
குன்றத்தில் ஒளிர்கின்ற
கோஹினூர் வைரமவள்,
ஓலமிடும் மன ஒலியில்
ஒன்று கூட கேட்டிடாது,
ஓசையின்றி ஒதுங்கி விட்டாள்
என் உயிரை மட்டும் உருவிக்கொண்டு
1 comment:
elamay suppper epdi coment kodukanu therla
Post a Comment