Thursday, October 8, 2009

வாழ்க்கை

ஓராண்டா....ஈராண்டா
இருபத்தி மூவாண்டு தவம்,
த‌டைப‌ட்டு போன‌து........
கல்லூரியில் கால் வைக்கும் முன்
காற்றில் சுழ‌ன்ற‌து
என் காலச் ச‌க்க‌ர‌ம்.....

ச‌ர‌ ச‌ர வென்றோடிய‌
வாழ்வில்
வசந்த‌மும் வந்த‌து,
வள‌மையும் தந்தது,
சிற‌கும் விரித்த‌து,
சிலுவையும் சுமந்த‌து......

இள‌மையை அட‌கு வைத்து
குடும்ப‌ம் தழைத்த‌து.....
த‌ர‌ணியில் த‌லைகாட்ட‌
தாழ்வு ம‌ன‌ப்பான்மை
என்னுள்
தாண்ட‌வ‌மாடிய‌து.....

மூழ்கிய‌ எரிம‌லை
மெதுவாய் மூச்சு விட‌
தாக‌ம் த‌லைக்கேறி
த‌மிழ் மோக‌ம்
என்னுள் "மேக்மா"வாய்
வழிந்தோடிய‌து
த‌மிழ் க‌ற்க‌ நினைத்தேன்
க‌ன‌வில் திழைத்தேன்....

1 comment:

Thenammai Lakshmanan said...

தன்னிரக்கம் வாங்கிய அடி

இன்னர்வீல் நட்பு

விழித்தெழு பெண்ணே

கிளிட்டர்ஸ் 09

வாழ்க்கை எல்லாமே அற்புதம் உமாராணி
உங்கள் உள்ளச் சிதறல் அருமை