மங்கையின் புன்னகை
மார்கழி பனிக்காற்று....
மழலையின் புன்னகை
மயக்கிடும் தேனூற்று....
அன்னையின் புன்னகை
அன்பெனும் நீரூற்று...
அதை உணர்ந்திட்டால்
நம் மனதிலே
ஆனந்த பூங்காற்று...
காற்றும் கடலும்
புன்னகைக்க
கரை தொட்டாடும்
அலை மிக அழகு...
அந்தி வெயிலின்
புன்னகையிலே
ஆறோடும் நீர் அழகு...
பொன் நகையின்
விலையேற்றத்தில் பெண்ணே!
உன் புன்னகையோ
மிக மிக அழகு....
2 comments:
பொன் நகையின்
விலையேற்றத்தில் பெண்ணே!
உன் புன்னகையோ
மிக மிக அழகு.... -
அருமை...!
மிக அருமை...!!!
ஒரு ஆண் மகனுக்குத்
தோன வேண்டிய ...
கவிதை :)
மிக அருமை.. வாழ்த்துக்கள்... உங்கள் தளயத்தை என் தளயத்திலும் இணத்துள்ளே.. உங்கள் சம்மதம் உண்டா??
http://www.icesukutty.blogspot.com
Post a Comment