அசோக வனம்...
அழகிய வனம்
அதிலொரு பயணம்
அடர்ந்த காட்டுக்குள்
அசோக வனம்...
அழகின் உச்சமென
அதிலொரு குளம்
ஆற்றின் மறுபக்கம்
அனுமனின் பாதம்...
உள்ளம் களிகொள்ள
உலகம் மறந்தேன்
உறைந்திடும் பனி நீரில்
பாதம் நனைத்தேன்...
சுட்டது தண்ணீர்
சுருக்கென பட்டது மனதில்,
இது தண்ணீரல்ல
சீதை அழுத கண்ணீர்...
கண்ணனின் காதலி-என்
கண்களில் நீர் துளி,
காதலின் பிரிவெண்ணி
ஆற்றில் கலந்தது
மீண்டும் என் நீர் துளி.....
No comments:
Post a Comment