தந்தையின் நினைவு நாளில்
தவிக்கிறது என் மனம்.
அவரின் மரணம் எண்ணியல்ல,
தம்பியின் மனதை எண்ணி..
சராசரி மானுடன் நான்...
அந்தாதி பாடி அந்த
அபிராமியிடம் நியாயம்
கேட்க முடியவில்லை...
இயல்பாக கேட்கிறேன்
உன்னை எண்ணி
உருகுபவருக்கு மட்டும் தான்
உயிர்பிச்சை அளிப்பாயா?
காதணி வீசி காலனிடம் இருந்து
பட்டரை காத்த நீ
உள் அன்போடு உயர் சேவை செய்த
உள்ளத்தை மறந்தது ஏனோ??
காலம் காலமாய் மாறாத வடுவாகி
மனதை அறுக்கிறது
அவன் விட்ட கண்ணீர்,
அன்றிலிருந்து தான் தம்பிக்கும்
இன்னொரு தாயனேன்.
தளராத பக்தியோடு
தயை கூர்ந்து வேண்டுகிறேன்
தந்தையின் ஆன்மா சாந்தி
அடைய செய்து விடு.
No comments:
Post a Comment