சர்க்கரை
எண்ணும் போதே
எச்சில் ஊறும்
ஏகாந்த போதை,
போகிற போக்கில்
ஆளை புரட்டிடும் பாறை..
சர்க்கரை ருசியில்
சலசலக்கும் ரத்தம்,
எதிர்கால சந்ததியரோடு
எதற்கு இந்த யுத்தம்?..
உண்ணாதே என்றுரைக்கவில்லை
உண்ணாதிருத்தல் நலனென்ற
நல்லெண்ணத்தில் நவில்கிறேன்
நயமுடன் நான் ..
நீரிழிவு உன்னை நீங்கிட
வெறுத்திடு வெள்ளை அரக்கனை,
கலந்திடு கரும்பு சர்க்கரையை
உணவே என்றும் மருந்தாக...
நீயும் நானும்
நாளை வரும் நம் தலைமுறையும் ,
ஆரோக்கியமாய் வாழ
தவிர்க்க வேண்டிய முதல் உணவு,
எதிக்க வேண்டிய முதல் எதிரி
சர்க்கரை என்னும் சாத்தானை..
இனிப்பை தவிர்த்து
இனிதே வாழ்வோம்.
( ஆரோக்கியா மருத்துவமனையில் நடந்த கவிதை போட்டிக்கு எழுதி அனுப்பினது )
No comments:
Post a Comment