Thursday, August 12, 2010
எரி தழல் ஏந்தி வா.....
விண்ணும் விரிசல் விழ
விளைநிலமெல்லாம் வீடாக
வியர்வையை முத்தாக்கி
விளைவித்த நெல்மணியை
தன் சொத்தாக்கி
சோறு போட்ட விவசாயி
வாழ்வில் சோகம் போக்கிட
எரிதழல் ஏந்தி வா.....
பள்ளிச் செல்லும் பட்டாம்பூச்சி
பசியினை பகடையாக்கி
பிஞ்சு பொன்விரல்கள்
கன்றி தழும்பேற,
கட்டிய கனவுக்கோட்டையை
காற்றில் சுக்கு நூறாக்கும்
சுய நல அரக்கனை அழிக்க
எரிதழல் ஏந்தி வா....
அன்னையால் பிறந்தும்
தங்கையோடு வளர்ந்தும்
தாரமாய் வந்தவளின்
தங்க குணம் பாராது
தங்கத்தை எடைபோட்டு
அவள் அங்கத்தை பஷ்பமாக்கும்
வரதட்சணை அரக்கனை
வேரோடு அழிக்க
எரிதழல் ஏந்தி வா....
கருவிலே உருவாக்கி
உயிரையே திரியாக்கி
ஊண் உருக உனை வளர்க்கும்
உன்மத்த பெற்றோரின்
உள்ளம் தகர்த்து
முதியோர் இல்லம் அனுப்பும்
முட்டாள்களை மூழ்கடிக்க
எரிதழல் ஏந்தி வா...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment