ஒரு சிறிய கதை....
[ஒரு இளவரசியை சேர நாட்டு படை தளபதி விரும்புகிறார்.
ஆனால் அவள் தந்தையோ வெரொரு வணிகரை மணம் செய்து வைக்க
விரும்புகிறார், எது தெரிந்து மூவரும் ஒருவருக்கு ஒருவர்
விட்டு கொடுப்பதாக நினைத்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்..
இதை பார்த்த இயற்கை தேவன் அடுத்த பிறவியிலாவது மூவரும் இணைந்து
சந்தோசமாக வாழ ஆசிர்வதிக்கிறார்..
மறுபிறவியில் அவள் வணிகரை முதலில் மணம் முடித்து விட்டாள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதியை சந்திக்கிறாள்...அப்போது அவள் என்ன
முடிவு எடுத்தால் மூவரும் சந்தோஷமாக வாழலாம்????]
முடிந்து போன
சொந்தமொன்று
முல்லை மலராய்
மூச்சு விட
வானம்பாடியாய் வந்தது
வணிகரின் காதல்...
வசந்த கால நதியினிலே
சுழல் ஒன்று வந்தது போல்
தலையெடுத்த காலம் வரை
வாராத தளபதி
தலை நரைத்து போகும் முன்
வந்து விட்ட கோலமென்ன?
இயற்கை தந்த சாபமோ
இளவரசி செய்த பாவமோ
இன்றும் காதல்
இதயத்தை கிழிக்கிறதே....
காலம் கடந்த காதலை
கருத்தினில் ஏற்க முடியாது
காமம் கடந்த காதலாய்
கண்ணுக்குள் சிறை வைத்தாள்
'நட்பாக'
1 comment:
super but thalapathi pavam so thalapathiku yethavathu seiya vendum. ilavarasiyal mudinthal kadal pitchai podattum.KAVITHAIKKU VARIKAL NANTRAKA ULLATHU BUT KANNANUKKU ATHIL UDANBADU ILLAI.
Post a Comment