ஓராண்டா....ஈராண்டா
இருபத்தி மூவாண்டு தவம்,
தடைபட்டு போனது........
கல்லூரியில் கால் வைக்கும் முன்
காற்றில் சுழன்றது
என் காலச் சக்கரம்.....
சர சர வென்றோடிய
வாழ்வில்
வசந்தமும் வந்தது,
வளமையும் தந்தது,
சிறகும் விரித்தது,
சிலுவையும் சுமந்தது......
இளமையை அடகு வைத்து
குடும்பம் தழைத்தது.....
தரணியில் தலைகாட்ட
தாழ்வு மனப்பான்மை
என்னுள்
தாண்டவமாடியது.....
மூழ்கிய எரிமலை
மெதுவாய் மூச்சு விட
தாகம் தலைக்கேறி
தமிழ் மோகம்
என்னுள் "மேக்மா"வாய்
வழிந்தோடியது
தமிழ் கற்க நினைத்தேன்
கனவில் திழைத்தேன்....
Thursday, October 8, 2009
Tuesday, October 6, 2009
glitters09
காலையில் கண்விழித்தேன்
கண் முன்னே கலர் கனவு
கவனத்தில் வந்தது
இன்று இளமை திருவிழா....
பத்து மணிக்கு மண்டபம் அடைந்தேன்
என் வயதில் 10 குறைந்தது,
பார்வையில் பட்ட
பாவையரின் கண்களில்
எந்தன் பாதியே தெரிந்தது...
பன்னிரண்டு மணித்துளியில்
கவிதை தேர்ந்தெடுக்கும்
கவிஞனானேன்,
கை கொட்டி கேலி செய்த
என் மனதை மறைத்து...
மதியம் செல்லச் செல்ல
மயில்களின் வண்ணத்தில்
மனம் உருகி,
உடன் உறைந்தது
உயிர் ஓவியத்தில்....
அந்தியில் ஓரு ஆதவனாய்
விஜய் ஆதி ராஜ் ஜின்
அசத்தல் வருகை,
அவர் கையால் கிடைத்தது
அழகிய சால்வை...
இரவு நெருங்கியது
கனவு மயங்கியது
நிகழ்வு நினைவில் வந்து
கடமை தொடங்கியது
மட்டில்லா மகிழ்வோடு
மறு விழாவை எதிர் பார்த்து.........
Subscribe to:
Posts (Atom)