மூவுலகையும் சுற்றி வந்தேன்
மும்மூர்தியை வணங்கி நின்றேன்
மும்மதமும் ஓர் மதமாக....
காஷ்மீர் என்ன காபூல் என்ன
கருணை கண் கொண்டு நோக்கிட
அயோத்தி என்ன ஆப்கான் என்ன...
பாபர் மசூதி இராமனுக்கென்றால்
பாவப்பட்ட மனிதா- நீ
இடித்த அன்றே அவர் இறந்திருப்பார்...
அக்பரும் இராமரும் ஓர் இனம்
இருவரின் இரத்தமும் ஓர் நிறம்
இருப்பினும் உனக்கேன் வெறி குணம்...
இருவரும் இணைந்து ஒன்றனால்
இறந்தவர் மீண்டும் உயிர் பெறுவார்
இந்தியாவில் அமைதி மலரச் செய்வார்....
1 comment:
அருமையான வரிகள்
கருத்தும் தான்
வாழ்த்துகள்
Post a Comment