அன்பு பாசம் கருணை அக்கறை அனைத்தும் ஒன்றிணைந்த பரிமாணம் காதல்.
விசா இன்றி விண்ணில் மிதந்து, அன்னிய மண்ணில் இறங்கி ,
என் வாட்ஸப் கதவை தட்டியது உங்கள் காதல் .
வரலாரும் கண்டிடாத வாஞ்சை மிகு வார்த்தைகள் வாழ்த்து வடிவில்...
இத்தனை மனிதர்களை எனகளித்த இறைவனுக்கு தான்,
என் மீது எத்துணை காதல் ❤️.
நினைக்கையில்,
இதயம் நிறைந்து,
விழியில் கறைந்தது,
ஆனந்த கண்ணீராய் 😇,
வானவில்லின் 🌈
வண்ணத்தை கடன் வாங்கி, உங்கள் வாழ்த்துக்கு,
நன்றி வரைகிறேன்🙏.
என்றும் அன்புடன்,
உமாராணி
கருணாமூர்த்தி*
No comments:
Post a Comment