எட்டு எட்டாய் நடை பயின்று,
பட்டு ரோஜா நாலு பெற்று,
பார் புகழ உயர வைத்தோம்,
இருபத்தியெட்டு ஆண்டுக்குள்ளே...
எத்தனையோ சண்டைகளில்,
எட்டிப் பார்த்த கோபங்களில்,
ஒளிந்து நின்ற பாசத்தை,
பாவை நான் பகுத்தறிய,
பாதி வாழ்க்கை கழிந்தது...
கரி பூச எண்ணி
சதி செய்த சமூகத்தில்,
கறைபடாது எனை காத்த,
கல்லுக்குள் ஈரமாய்
கடவுளை நான் காண,
கால் நூறாண்டு கடந்தது...
பாசத்தின் கொள்ளளவை,
பாத்தியப் பட்ட நாம் உணர,
மீதி வாழ்வு வழங்கிடவே,
இறை வணங்கி
அருள் வேண்டிடுவோம்...
பட்டு ரோஜா நாலு பெற்று,
பார் புகழ உயர வைத்தோம்,
இருபத்தியெட்டு ஆண்டுக்குள்ளே...
எத்தனையோ சண்டைகளில்,
எட்டிப் பார்த்த கோபங்களில்,
ஒளிந்து நின்ற பாசத்தை,
பாவை நான் பகுத்தறிய,
பாதி வாழ்க்கை கழிந்தது...
கரி பூச எண்ணி
சதி செய்த சமூகத்தில்,
கறைபடாது எனை காத்த,
கல்லுக்குள் ஈரமாய்
கடவுளை நான் காண,
கால் நூறாண்டு கடந்தது...
பாசத்தின் கொள்ளளவை,
பாத்தியப் பட்ட நாம் உணர,
மீதி வாழ்வு வழங்கிடவே,
இறை வணங்கி
அருள் வேண்டிடுவோம்...
No comments:
Post a Comment