போராடும் மனதோடு
போட்டியிட பிறந்தவளே!
பூரிக்கிறது நெஞ்சம்
புவியில் உன்னை ஈன்றதற்கு...
அத்தனைக்கும் போட்டி
அனைத்துடனும் போட்டி...
அழகில் அல்லி மலருடன் போட்டி
அன்பில் என் அன்னையுடன் போட்டி...
நிறத்தில் நிலவுடன் போட்டி
நீண்ட கூந்தலோ
கார் முகிலுடன் போட்டி...
முல்லை மலருடன்
உன் முத்து பற்கள் போட்டி...
வெள்ளை சிரிப்பொலியில்
வெள்ளி கொலுசு தலை சாய
தகதகக்கும் தேகமது
தங்கத்தோடு போட்டி..
போதுமடி பெண்ணே
போராட்டத்தை நிறுத்தி விடு,
இயற்கையும் தோற்கிறது உன்
இன்முக சிரிப்பிலே...
ஈன்றவளும் தோற்கிறேன்
ஈடில்லா உன் கருணையிலே...
( இதில் உயர்வு நவிற்சியோ
வஞ்சபுகழ்ச்சியோ கிடையாது )
No comments:
Post a Comment