குன்றத்து முருகன் குழந்தை வடிவில்... குதூகலத்தில் மனம் கூடி கும்மியடிக்கிறது.. கூர்மதி கருணையோடு குறைவில்லா அழகினோடும் அகிலமே திரும்பி பார்க்க அடியெடுத்து வைக்கும் அறிவு மலரே-உன்னை
மண்டியிட்டு கேட்கிறேன் மன்னித்து விடு மணாளனே... உரைப்பது உண்மையென என் உள்ளம் உணர்ந்தும் உன்னையும் ஏற்க சொல்லி ஏனிந்த அதிகாரம்??? என்னைப் பற்றி எனக்கு தெரிந்தும் ஏனிந்த எதிர்பார்ப்பு?? எட்டவில்லை என் மூளைக்கு... தேகம் திரியாக்கி யாகம் வளர்க்கையில், வழிந்தோடும் என் வலியை நீ உணர.. தேனூறும் என் நெஞ்சின் தெளிவை நீ அறிய நீ ....நானல்லவே. இரவெல்லாம் யோசித்து விட்டுவிட்டேன் இன்று, உன்னையல்ல... உன் மீது நான் கொண்ட கோபத்தை, என்னை நம்ப வைக்க நான் செய்த யாகத்தை...
(டெல்லியில் கற்பழிக்கபட்ட மாணவி வெறும் கற்பழிப்புக்கு மட்டும் ஆளாகவில்லை,கொடுரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள், எல்லார் மனதிலும் இவ்வளவு தாக்கம் ஏற்பட அதுவும் ஒரு காரணம்... அந்த மாணவிக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.....) காலதேவன் ஆலயத்தில் கனவுச் சுமந்த காரிகையே! காற்று கை தொடுகையில் கனிந்து விடும் மாங்கனியே! மலர் போன்ற உன் தேகம் மறைந்து விட்டாலும் எங்கள் மனதோடு உன் நினைவு படிந்து விட்டதடி... காமனின் களியாட்டத்தில் காலாவதியானதுவோ இரக்க குணம் மருத்துவராகும் உன் கனவை மண்ணில் புதைத்ததுவே மிருக மனம்....... பூவே நீ உன்னை காக்க புயலாக போராடியும் பேரிடி தாக்கத்தில் சிதறி விட்டாயடி....... மகத்தான தேவதையே! மண்ணில் மங்கையருக்கு எச்சரிக்கை மணியடித்து நீ மரணத்தை ஏற்றுக்கொண்டாய்.... சாக்கடையில் பிறந்த அந்த சாத்தான்களுக்கு சட்டம் சாட்டையடி கொடுக்கவில்லை சாகும் வரை இன்னும் தூக்கிலிடபடவும் இல்லை.... சகோதரிகள் எங்கள் பாதுகாப்பிற்கு சட்டம் வர காரணமானவளே! சத்தியமாய் சொல்கின்றோம், உன் சமாதி ஈரம் காயும் முன்னே அந்த காம சாத்தான்களுக்கு கசையடி நாங்கள் கொடுப்போம்.... தன் உடலும் உயிரும் உருக்கி எங்கள் உணர்வுகளை தொட்டவளே! உன் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்.......