நிலா....
காலை விடிகையில்
காற்றில் கரையும் நிலா....
நித்திரை கொள்கையிலும்
தன் முத்திரை மறைக்கும் நிலா...
நினைவுகள் எங்கும்
நீந்திச் செல்லும் நிலா...
என் கனவில் மட்டும்
தினம் வந்து போகும் உலா..
பார்த்து பார்த்து லயித்தாலும்
பாத்திய படாதவளானதால்
பங்கு பெற முடியாத
உன் வாழ்க்கையில் விழா....
2 comments:
நிலா
தரும் ஒளி - இதயம் வருடும்
மெல்லிய வருடல்
உலா
உள்ளம் மகிழ உதயமாகும்
இதயத்தின் தேடல்
பலா
முக்கனியுள் ஒன்றாய்
ஒற்றுமையின் சிறப்பாய்
வெற்றி எனும் தேடலை . . .
தேடும் . . .
இளம் நெஞ்சம்
நிலவு தரும் நிஜம்
நிழலாய் இல்லாமல் நிஜமாய் . . .
அன்புடன்
கந்தவேல் என்றும் கவிதையுடன் . . .
குமரி மண்ணிலிருந்து . . .
நம்பிக்கை ஊட்டிய நண்பருக்கு நன்றி. பல வருடம் கழித்து படிக்கையிலும் உம் வார்த்தைகளால் தெளிவு கொள்கிறது மனம்.
Post a Comment