மௌனத்தின் தாக்கம்
அழகு விளக்கொன்று எரிய
அதை விளையாட்டாய் என் விரல் தடவ
ஒரு முறை சுட்ட காயத்தில்
ஓராயிரம் ஓட்டைகள்
என் இதயத்தில்...
பேசியே பழி வாங்கும் உலகத்தில்
பேசாது பைத்தியமாக்க
எங்கு நீ கற்று கொண்டாய் ?
வைத்தியத்திற்கு வழியின்றி
வாய் மூடி அழுகின்றேன்...
நெருப்பைக் காதலிக்க_ நான்
நெருப்புக் கோழியுமில்லை
நெருப்பென்று விலகிச் செல்ல_என்
நெஞ்சிலே துணிவுமில்லை...
சுட்டிடும் சூரியனை
சுற்றிடும் பூமியாக
எட்ட நின்றேனும் பார்த்திடுவேன்
ஏங்கிடும் இதயத்தை
தாங்கிக் கொண்டே.....
No comments:
Post a Comment