என்னை கண் கொண்டு நோக்கிடின்
கண்ணி வெடியாய் சிதறிடுவீர்
காரணம்...
கற்பனை செய்யாத
காரிருள் தேகம்
கனவிலும் வாராது
என் மீது மோகம்...
கூன் விழும் தோள்களோடு
கரு நாக தோல்கள் மூடி,
முகம் சுழிக்க செய்யும்
முன் நெற்றி வழுக்கை...
காணாமல் போனது
கருவிழியிள் 1/4கண்டால் போவது
நம் நட்பில் 3/4...
அகிலத்தை ஆட்டி வைக்கும் உன்னை
அரை நொடியேனும் ஆட வைப்பேன்...
அணு குண்டாய் வந்தே
ஓர் நாளில் அலற வைப்பேன்...
1 comment:
எல்லா நலமும், வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவது தமிழ்த்தோட்ட நண்பர்க்கள்.
http://tamilparks.50webs.com
Post a Comment