இரு வழி பாதை
இரு வழி பயணம்
இருவரும் சங்கமித்தல்
சாத்தியமா நண்பனே!
சந்திப்பு நேராத வரையில்
சந்தித்தோம் பல முறை
சந்தர்ப்பம் வாய்த்தவுடன்
சந்திக்க மறுக்கிறது என் கண்கள்.....
நான் யாசித்த இதயம்
என்னை நேசிக்கவில்லை...
என்னை நேசித்த இதயமோ
புவியில் இன்று சுவாசிக்கவில்லை...
அருகிருக்கையில் பேசாத என்னுள்ளம்
அதையெண்ணி அழுகிறது
தொலைவில் நீ சென்ற பின்னே!
பக்கத்தில் இருக்கையில்
பற்ற வைத்த பாச நெருப்பு
பற்றி எரிகிற்து நீ
என்னை விட்டு எங்கோ சென்ற பின்னே!
பல செல் கூடி
உருவான உடலானது-உன்
ஒரு சொல் கேட்க
உயிரோடு நடமாடுது...
தொட்டு விட்டேன் சிகரத்தை
திரும்பி பார்க்கையில்
காலடி தடத்திலெல்லாம்
காயாத இரத்த துளிகள்....
4 comments:
வாழத்துக்கள் உள்ளச் சிதறல்!! கவிதைகளை வாசித்தேன்...வழியெங்கும் சோகச்சிதறல்களாக உள்ளனவே?
வாழ்க்கை வாழவதற்கே!!வாழத்துக்கள்
முகவைத்தமிழன்
www.tmpolitics.net
www.tamilmuslimmedia.com
உங்கள் கவிதைகல் அருமை....உண்மையை கூறுவதாலோ என்னவோ உங்கள் கவிப்பக்கம் நான் ஈர்ந்து விட்டேன்...
மனதார வாழ்த்துகிறேன் சகோதரி...
அன்புடன்..முகம் தெரியா ஓர் சகோதரி...
தொடர்ந்து எழுதுங்கள்....
nice pa
Uma, It's fantastic., It's admirable.,
Post a Comment