நாம் பேசாத நாளெல்லாம்
கனவினில் நீ வந்து
என் கால்களை தடவிப் பார்
தழும்புகளின் எண்ணிக்கை
எகிறி போயிருக்கும்
என் இதய துடிப்பை போல...
தீராத மோகத்தில்
தீயும் முத்தமிட
தங்க நிற தோலிலே
கருப்பு நிற வட்ட நிலா...
வருடிக்கொண்டே வாழ்ந்திடுவேன்
உன் நினைவின் பதியமென்று...
என்றாவது ஒரு நாள்
என் மரணச் செய்தி
கேட்க நேர்ந்தால்
மறுக்காது ஒத்துக்கொள்
விதைத்தது நீயென்று...
மறுஜென்ம விதியிருப்பின்
விதிவிலக்காய் வேண்டிடுவேன்
வீணாய் போன மனிதனை விட
மந்தியாய் பிறப்பெடுக்க..
மறுக்கப்பட்ட காதலது
மறுபடியும் துளிராதிருக்க.........