என்றும் இணையில்லா
இன்னர்வீல் தொடங்கின
இருண்ட என் இதயத்தில்
மின்னல் பூ பூத்தன..
பெண்ணாய் பிறந்தேன்
புவியோடு வளர்ந்தேன்
கண்ணனுக்கு வாக்கப்பட்டு
கற்பனையாய் வாழ்ந்தேன்..
காட்டாற்று வெள்ளமென
கலமது சுழன்றோட
கண்ணிமைக்கும் நேரத்தில்
இன்னர்வீல் வந்தது
இனிய குடும்பம் தந்தது..
விட்டு போன உறவெல்லாம்
தரணியிலே சிதறியிருக்க
தானும் சென்று உதவிடும்
தாய்மை உணர்வை தந்தது..
நட்பு என்னும் தாய் வயிற்றில்
நாழும் பிறந்து சேயானோம்
தாய் இல்லா சேய்களும்
தழைத்தோங்க உதவிடுவோம்..
சாதி மதம் பல கடந்து
வயது வசதி தனை மறந்து
தனிமை சிறையின் விலங்குடைத்து
வானமளவு உயர்ந்திடுவோம்
நமக்குள் வல்லமை பல தந்திடுவோம்..
தாயாய் தங்கையாய் தரம் பிரித்து
தன் மன உணர்வை பகிர்ந்திடுவோம்,
தோழியாய் குழந்தையாய் குணம் மாறி
கூடி குலாவி மகிழ்ந்திடுவோம்..
கூட்டு குடும்பம் மறையும் காலமிதில்
சுற்றம் என்ன சொன்னாலும்
எந்த சூழலில் மாட்டிக் கொண்டாலும்
இன்னர்வீல் குடும்பம் கலையாது
நாம் கூடி களித்து வாழும் வரை..