அன்னை தெரசாவின்
சேயாக பிடிக்கும்...
வைரமுத்துவின்
தோழியாக பிடிக்கும்...
லேனா தமிழ்வாணனுக்கு
தங்கையாக பிடிக்கும்...
கமலக்கண்ணனுக்கு
காதலியாக பிடிக்கும்...
ரஹ்மான் இசையில்
பாட பிடிக்கும்....
என் கண்வனுக்கு மட்டும்
மனைவியாக பிடிக்கும்...
உனக்கும் கூட
அன்னையாக பிடிக்கும்...
ஆனால்...
இவர்கள் அனைவருக்கும்
என்னை பிடிக்குமா???
Tuesday, July 29, 2008
Thursday, July 17, 2008
மறக்க முடியுமா?
நட்பினை நினைவு படுத்த
நாட்காட்டியில் நாளுளதாமே!
நான் அதை மறந்து விட்டேன்...
அகத்தீயில் எரிகையில்
புறமிருந்து எனை காத்த
புன் செய் விளை நிலமே!
உனை நான் மறந்து விட்டேன்....
பிள்ளை மொழி கேட்ட என்னை
பித்தனாக்கி பிறழ வைத்த
தங்க தமிழ் மொழியே!
உனை என்றோ மறந்து விட்டேன்...
என் சித்தம் கலங்கிடாது
நித்தம் நனைத்த
நிலவொளியே!
உனை கூட மறந்து விட்டேன்....
பாசமென்னும் பாசக்கயிற்றால்
பன் முறை உயிர் குடித்தத்
தென்றலே!
உனையும் தான் மறந்து விட்டேன்...
ஓ! மறந்து விட்டேன் பார்த்தாயா?
மரணம் எனை தழுவி
மாதம் ஒன்று ஆனதையே!!
கா.உமார்த்தி
நாட்காட்டியில் நாளுளதாமே!
நான் அதை மறந்து விட்டேன்...
அகத்தீயில் எரிகையில்
புறமிருந்து எனை காத்த
புன் செய் விளை நிலமே!
உனை நான் மறந்து விட்டேன்....
பிள்ளை மொழி கேட்ட என்னை
பித்தனாக்கி பிறழ வைத்த
தங்க தமிழ் மொழியே!
உனை என்றோ மறந்து விட்டேன்...
என் சித்தம் கலங்கிடாது
நித்தம் நனைத்த
நிலவொளியே!
உனை கூட மறந்து விட்டேன்....
பாசமென்னும் பாசக்கயிற்றால்
பன் முறை உயிர் குடித்தத்
தென்றலே!
உனையும் தான் மறந்து விட்டேன்...
ஓ! மறந்து விட்டேன் பார்த்தாயா?
மரணம் எனை தழுவி
மாதம் ஒன்று ஆனதையே!!
கா.உமார்த்தி
Monday, July 14, 2008
you too karnaa?
செஞ்சோற்று நன்றிக்கு
சொல்லொண்ணா இலக்கணம் கர்ணன்....
மாசற்ற நட்பிற்கு
மங்காத இலக்கணம் கர்ணன்....
தான தர்ம செயலுக்கு
தன்னிகரில்லா இலக்கணம் கர்ணன்....
அன்னையின் அன்பிற்கு
அப்பழுக்கற்ற இலக்கணம் கர்ணன்....
வெண் மேகத்தில் கரும் புள்ளியாய்
சூதாட்டதிலும் கர்ணன்....
க.உமார்த்தி
சொல்லொண்ணா இலக்கணம் கர்ணன்....
மாசற்ற நட்பிற்கு
மங்காத இலக்கணம் கர்ணன்....
தான தர்ம செயலுக்கு
தன்னிகரில்லா இலக்கணம் கர்ணன்....
அன்னையின் அன்பிற்கு
அப்பழுக்கற்ற இலக்கணம் கர்ணன்....
வெண் மேகத்தில் கரும் புள்ளியாய்
சூதாட்டதிலும் கர்ணன்....
க.உமார்த்தி
Subscribe to:
Posts (Atom)