Monday, April 23, 2007

அகர வரிசையில் ஆசையொன்று...

ன்பு அலையடிக்க
சைக்கு அணை போட்டும்
தயத்தின் இடப் பக்கம்
ட்டியாய் இறஙகி விட்ட
னக்கு மட்டும் கூறுகின்றேன்
ணுக்கும் தெரியாது
ன்னுள்ளம் எரிகிறது
னென்று புரியாது
ம்புலனும் அழுகிறது...
ருவரும் அறியது
சையின்றி வந்து விடு...
மயானத்தில் மட்டுமாவது
மறுபடியும் சந்திப்போம்....

சோக கீதம்...

காலையில் எழுந்ததும்
காதினில் ஒலித்தது
சோலை குயிலின்
சோக கீதம்....
பின்பு தான் தெரிந்தது
அது சோலை குயிலல்ல,
என் போல் கூட்டு குயிலென்று...

கீரீடம்.....

மலைகளின் இளவரசிக்கு
இயற்கை அன்னை
வைத்தள்
மூடுபனியால் மணி மகுடம்.....

குங்குமம்.....

பத்தினி பெண்ணின்
நெற்றி திலகம்
பாதை மாறிய பார்வைக்கு
ஒரு டிராபிக் சிக்னல்......

ஹைகூ....

நீ பூப்பெய்தியவுடன்
உன் தாய் கலங்குவதேன்
அவள் மூப்பெய்திய
கவலையிலா?



ஆண்களே!

இம்சை செய்து மங்கையரை
'மேக்மா' வாக்காமல்
அகிம்சையை ஆதரித்து
மகாத்மா ஆக்கிடுங்கள்...



இறந்து விட்ட இதயம்
இன்னமும் துடிக்கிறது
இறங்காத உன் நினைவால்....




முள்ளில்லா ரோஜா
என் மனதில்
முள்ளாய் குத்துகிறது
உன் நினைவு........



உறைய வைத்த ஒற்றை பார்வை
உறங்கையில் வலிக்கிறது
உள்ளமெங்கும்.....



பார்வையால் உயிர் பறிக்க
பாசமென்ன பாசக்கயிறா?



கவியென்னும் கயிறு கொண்டு
கட்டி வைத்தாய் இரு விழிக்குள்......



உருவில்லா உன் மனதை
உற்றுக் கேள்
உள்ளச் சிணுங்களில்
உறைந்திருக்கும் என் குரலும்......


Wednesday, April 18, 2007

ஹைகூ..............

கண்ணாடி காட்டாத
என் பிம்பம், அதை
உன் முன்னாடி நிற்கையில்
காண்கின்றேன்............


கல் நெஞ்சுக்காரி தான் நான்
உன்னை என்னுள்
செதுக்கியதால்......



என்னோடு இருக்கையில்
எழுதவில்லை ஒரு வரியும்,
மண்ணோடு மறைந்த பின்
பிதற்றுகின்றேன் பிழைகளாக....

நட்பு.................

சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை

காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,

காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,

தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,

தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,

விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை

பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை.

Saturday, April 14, 2007

எச்சரிக்கை...............

பூவையரை பூக்களென
புலவர்கள் புகழ்ந்ததால்
பூவினவள் வாசத்தை
நுகரத் துடிக்கும் ஆண்களே
பூ ஒன்று புயலாகி
பூகம்பம் ஏற்பட்டால்
புஜ் நகரம் போல்
பொடிப் பொடியாய்ப்
போவீர்கள்.

Friday, April 13, 2007

நிலா.................


நீல வான ஓடையில்
நீந்தி விளையாடிய நிலவொன்று
மித்ந்து வந்த மேகத்தில்
மோகம் கொண்டு அதனுள்
மோகித்து மறைந்தது;

மறைந்த நிலவு
கரைந்து கரைந்து
விண்மீன்களை உருவாக்க,
மோகம் தெளிந்த மேகமோ
நிலவை விட்டு விலக
முழு நிலவானது
மூன்றாம்பிறையாக
நிர்சலனமின்றி தோன்றியது;

நிர்மல வானில்
மூன்றாம் பிறையை
ரசித்துக் கவிபாடும்
கவிஞன் வரும் வரை
முழுவதும் கரைந்து
அம்மாவாசை வந்து விட்டால்
பாவம் அந்த நிலாவென்று
அழுதழுது கரைந்தது வானம்...

கண்கள்......................

கடலில் இரண்டு கெண்டை மீன்களை
காணவில்லையாம்.....
அது உன் கண்களில் துள்ளுவது
எனக்கு மட்டும் தானே தெரியும்....
கா.உமார்த்தி
துள்ளுகிறதென்று.

ஸ்பரிசம்....................



சில்லென்ற பனிபுகையால்
சில்லிட்ட என் மேனி
உன் சுவாசக் காற்றினிலே
பனிமழையாய்
உருகியதே.

Thursday, April 12, 2007

பெண்...............

பெண்ணே
நீ வரும்போது
உன் கண்ணின்
மின்னல் கண்டு
என் இதயம்
பூப்பூத்தது.......
உன் சிரிப்பின்
ஒலிகேட்டு
மௌத் ஆர்கன்
மௌனமானது.....
உன் தேக வாசத்தில்
என் வீட்டின்
ரோஜாதலைகுனிந்தது......
என்னைத் தொட்டுச்
செல்லும்போது
என் உயிரேஅடிமையானது..........._
_____________ உமார்த்தி.

விட்டில்பூச்சி.............











விடிய விடிய
வளைய வந்தாய்
விளக்கை.

விடிந்ததும்
விளக்கு வைத்தது
மலர்வளையம் உனக்கு.
_______________________உமார்த்தி